ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மக்கள் விசாரணை மன்றம்.
ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெண்ணாகரம் பேருந்து நிலையத்தில் மக்கள் விசாரணை மன்றம் நடைபெற்றது.
மோடி தலைமையிலான பாஜக அரசு தலைமை ஏற்று ஏழு ஆண்டுகளில் தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவம் 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்கவேண்டும் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் 100 நாட்களுக்கான கூலியை 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விசாரணை மன்றம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பெண்ணாகரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இதற்கு கட்சியின் நகர செயலாளர் எஸ் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி மாதன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிஎம் முருகேசன் வி ரவி பகுதி செயலாளர்கள் கே அன்பு சக்திவேல் என் பி முருகன் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் உரையாற்றினர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்