ஒசூர் ஒன்றியத்தில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்ததால், இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம்,நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக 2019 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சாவித்ரியம்மா மல்லேஷ் ரெட்டி வெற்றி பெற்றார். கடந்தாண்டு சாவித்ரியம்மா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், அந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அக்டோபர் 9 அன்று நல்லூர் ஊராட்சிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஓசூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் திமுக சார்பில் சந்தா வீரபத்திராவும், கடந்தாண்டு உயிரிழந்த அதிமுக ஊரட்சி மன்ற தலைவர் சாவித்திரியம்மாவின் மகள் சந்தியாவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.