அரூர் அருகே லாரி டூவீலர் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகில் எச்.தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த காணன(70)ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்; மாலை, 6:00 மணிக்கு, தனக்கு சொந்தமான டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் அரூரில் இருந்து சொந்த கிராமம் செல்வதற்காக அரூர்–சேலம் எச்.தொட்டம்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது, சேலத்திலிருந்து எதிரே வந்த லாரி மொபட் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்த காணன் உயிரிழந்தார். தகவலறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.