விவாகரத்து கேட்டு தனியறயில் மருமகளை துன்புறுத்திய கணவன் குடும்பத்தினர் போலீஸ் மீது புகார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அஸ்தகிரியூர் கிராமத்தைச் சார்ந்த சத்தியா(24) என்பவருக்கும் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து, முனியம்மா தம்பதியரின் மகன் வெங்கடேஸ்வரன் என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது . இந்நிலையில் திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரொக்கம்ரூ. 1 லட்சம் தருவதாக சத்யாவின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர்.
இன்றுவரை பேசியபடி வரதட்சனை கொடுக்காமல் தவிர்த்து வந்தனர். கோபமடைந்த வெங்கடேஸ்வரன் குடும்பத்தினர் சத்யாவை தனி அறையில் பூட்டி வைத்து கொடுமைப் படுத்தி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் அதிலிருந்து தப்பித்து வந்து சத்யா அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.