கிராமப்புறத்தில் விவசாம் வளர்ச்சி பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம்.
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேற்று அட்மா திட்டத்தின் சார்பில் உழவர் தின பெருவிழா தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் வசுந்தரேகா தலைமையில், வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக அரூர் வட்டாரத்தில் பையர்நாயக்கன்பட்டி, கோபாலபுரம், ஜமனஅள்ளி, சின்னாங்குப்பம், கொளகம்பட்டி, சட்ரப்பட்டி, பறையப்படி ஆகிய 7 பஞ்சாயத்துகளில் உள்ள விவசாய நிலங்கள் கணக்கெடுத்து, அந்த விவசாய நிலத்தின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்து வளர்ச்சி பெற என்னென்ன தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அரசு திட்டத்தின் மூலம் விவசாயத்தை வளர்ச்சி அடைய செய்வது.
தண்ணீர் வசதியின்றி விவசாயம் செய்ய முடியாத தரிசுநிலத்தின் அருகில் சிறிய தடுப்பணை கட்டுவதற்கு சாத்தியக்கூறு இருந்தால் பஞ்சாயத்து மூலம் கட்டுவது, மேலும் தரிசு நில விவசாயிக்கு சொந்தமான தரிசு நிலம் குறிப்பிட்ட அளவு இடம் வேளாண் துறைக்கு கொடுத்தாள் ஆழ்துளை கிணறு அமைத்துக் விவசாயத்தை வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஆலோசனை விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண் சார்ந்த பொறியியல், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, வணிகம், பட்டு வளர்ப்பு துறைகள் மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு அந்தந்தத் துறை சார்ந்த அரசு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண்துறை, சகோதர துறை சார்பில் வேளாண் சார்ந்த இடுபருள்களை கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இறுதியாக விவசாயிகளுக்கு இலவச விதைகள் செடிகள் வழங்கப்பட்டது.