அரூர் அருகே சிறிய விநாயகர் சிலை ஆர்வமாக வாங்கி செல்லும் பொதுமக்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பொது இடம் மற்றும் வீடுகளில் வைத்து தினந்தோறும் பூஜை செய்து பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கி, ஆரவாரத்துடன் வாகனம் மூலம் பக்தர்கள் விநாயகர் சிலையை நீர்நலைகளுக்கு கொண்டு சென்று கரைப்பது வழக்கம்.தற்பொழுது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் வீடு மற்றும் சொந்த இடத்தில் விநாயகர் சிலையை பூஜை செய்து சில நபர்கள் மட்டும் அருகில் உள்ள நீர் நிலையில் கரைக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார்.
வரும்10 தேதி (ஆவணி 25 )விநாயகர் சதுர்த்தி வருகிறது. தர்மபுரி மாவட்டம், அரூர அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடுட்டில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து சிலை தயாரிப்பாளர் குமரேசனிடம் கேட்டபோது அரசு அறிவிப்பின்படி வீட்டில் வைத்து பூஜை செய்வதற்காக ஆகம சாஸ்திர விதிப்படி விநாயகர் சிலை அரை அடி முதல் இரண்டரை அடி உயரம் வரை உருவாக்கப்பட்டுள்ளது. விலை குறைவு என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என அவர் தெரிவித்தார்.