அரூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு திமுக கூட்டணி கட்சியினர் எம்பி செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது கைவிட வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை திரும்பப் பெற வேண்டும் என் கருப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக அரூர் நகர பொறுப்பாளர் மோகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்திரமோகன், சௌந்தரராஜன், வேடம்மாள், தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் தமிழழகன்,. விசிக மாவட்ட செயலாளர் ஜானகிராமன், ஒன்றில் தொகுதி செயலாளர் சாகன்சர்மா, சிபிஎம் மாவட்ட செயலாளர் குமார், சிபிஐ மாவட்ட பொறுப்பாளர் தமிழ்குமரன், கொங்குநாடு மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.