கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளி வளாகத்தில் இந்தியன் கிங்ஸ ஸ்போட்ஸ் அகடமியின் குங்க்பூ மாணவர்களுக்கான பட்டைய தேர்ச்சி நடைபெற்றது.
இத்தேர்வினை கிராண்ட்மாஸ்டர் பவித்ராமன் மாஸ்டர் திம்மராஜ் மற்றும் முனாவர் பயிற்சியாளர்கள் ஆனந்தன் வேணுகோபால்,ரூபா கண்ணன், சந்தோஷ்குமார், அஸ்ஸலாம், குமுதவல்லி ,மகேஸ்வரி ,புவனேஸ்வரி, பவ்யா ,ஆகியோர் இணைந்து இந்தப் பட்டையை தேர்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சூளகிரி வட்டாட்சியர் நீலமேகன், உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தன், தலைமை காவலர் சரவணன், பெண் காவலர் நாகரத்தினம், வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் மணிமாறன், வார்டு உறுப்பினர் அப்சர், ஊடகத்துறை நிருபர்கள் சீனிவாசன், ரிகானா, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து பட்டயத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்