வருகின்ற 10 ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பதும், ஊர்வலம் எடுத்து செல்வதும் கொரோனா பரவல் கருதி தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C. கலைச்செல்வன் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழி காட்டு நெறிமுறைகள் மற்றும் நீதி மன்ற வழிகாட்டுதல்கள் ஆகியன ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்களான திரு. அண்ணாமலை, திரு. குணசேகரன் மற்றும் திரு. புஷ்பராஜ் அவர்கள் உடன் இருந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்.
செப்டம்பர் 07, 2021
0
Tags