அரூரை அடுத்த பேதாதம்பட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. அரூர் ஊராட்சி ஒன்றியம், பேதாதம்பட்டி அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவாசியப் பொருள்களை ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையினர் வழங்கியுள்ளனர். இதையடுத்து, அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு பொருள்களை பள்ளி மாணவர்களிடம் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் வழங்கினார். இந்த விழாவில் அரூர் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையின் அறங்காவலர் சத்யா, திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சௌந்தரராசு ஊராட்சி மன்றத் தலைவர் செ.பாரதிராஜா, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.