ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகை.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் பயனாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால். வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து விநாடிக்கு தற்போது 11 ஆயிரத்து 142 கன அடி உபரி நீர் தமிழகத்தில் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியில் தற்போதைய நீர்மட்டம் 116.82 அடியாக உள்ள நிலையில், விநாடிக்கு 6142 கன அடி உபரி வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போதைய நீர்மட்டம் 80.18 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 5000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழகம் மற்றும் கர்நாடகம் எல்லைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருவதால், தமிழக காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 1ஆம் தேதி 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து.
இங்குள்ள மத்திய நதிநீர் ஆணைய அதிகாரிகள் காவிரியில் நீர்வரத்து நிலவரத்தை அளவீடு செய்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கர்நாடகா தமிழகம் ஆகிய இரண்டு மாநில எல்லைகளை பிரிக்கும் வகையில் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகின்றது. அதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, உள்ளிட்ட பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியவாறு செல்கின்றன.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்து உள்ளதாலும், தமிழக காவிரியில் கரையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையங நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.