பராமரிப்பின்றி கிடக்கும் சூளகிரி பேருந்து நிலையம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பேருந்து நிலையம் 2016ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப்பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டு அன்று முதல் போதிய பராமரிப்பு இன்றி குப்பை காடாக பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது. மேலும் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை பூட்டிய நிலையிலே உள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்த குடிநீர் குழாய்களும் பாராமரிப்பின்றி காணப்படுகிறது. இரவு நேரங்களில் ஒளியின்றி இப்பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ள நாட்கள் முதல் இன்று வரை போதிய பராமரிப்பு இல்லை என பயணிகள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக