அரூரில் விநாயகர் சதுர்த்தி விழா
அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அரூர் சித்தேரி சாலையில், எல்லப்புடையாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அருள்மிகு விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாணராமர், நஞ்சுன்டேஸ்வரர் திருக்கோயில் உள்பட அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக