சூளகிரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சிறப்பு மருத்துவ முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் , அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக் இனணைந்து 1200 பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் ஓசூர் குணம் மருத்துவமனை மற்றும் சூளகிரி சுகாதார மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர். முகாமில் சிறப்புரை மாவட்ட நலக்கல்வியாளர் மா.சப்தமோகன் மற்றும் டாடா எலக்ட்ரானிக் சிஎஸ்ஆர் குழு மற்றும் சூளகிரி சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட நலக்கல்வியாளர் அரசு ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுபட்டது.