பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து இடைநின்ற மாணவர்களை வீடு தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர்த்த ஆசிரியர்கள்.
பள்ளிக் கல்வியை பாதியில் விட்டுவிடும் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வியை தொடரும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில முழுவதும் செயல்பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அவர்களின் அறிவுரைப்படி பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஆசிரியகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பென்னாகரம் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட கள்ளிப்புரம், அண்ணாநகர், கிருஷ்ணாபுரம், போடூர், உள்ளிட்ட பகுதிகளில் கல்வியை பாதியில் விட்ட மாணவர்களின் கல்வி தொடர செய்யும் வகையில் தமிழாசிரியர் முனியப்பன், சுரேஷ், கண்ணன், உதவி தலைமையாசிரியை லில்லி, கஞ்சபழனி, பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றனர்.
மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறினர். இதனைத் தொடர்ந்து இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கப் பட்டனர். குறிப்பாக பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப் பட்டனர். இதேபோல் ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து இடை நின்ற மாணவர்கள் மீண்டும் சேர்க்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.