போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் கர்பணி உயிரிழப்பா?? - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் கர்பணி உயிரிழப்பா??

ஓசூர் அருகே போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் கர்பணி உயிரிழப்பா??
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ் (28) பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோரிமா (27) இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது கோரிமா இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.

கோரிமா கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி, வயிற்றுவலி போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது கணவர் ரியாஸ் அவரை  கடந்த சில நாட்களாக  தொரப்பள்ளி கிராமத்தில்  அக்குபஞ்சர் மருத்துவர் முருகேசன்(59) என்பவரிடம் மருத்துவம் பார்த்ததாகவும் முருகேசன் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மருத்துவம் பார்த்த சிறிது நேரத்தில் கோரிமா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் கோரிமாவை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட மருத்துவ ஆயவாளர் ராஜூவ் காந்தி, ஒசூர் முதன்மை மருத்துவர் பூபதி ஆகியோர் தொரப்பள்ளி கிராமத்தில் முருகேசன் வைத்திருந்த மருந்தகத்தை ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களின் பரிந்துரையின்றி பல மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்தது தெரியவந்தது மருந்துகளை பறிமுதல் செய்து மெடிக்கலுக்கு சீல் வைத்தனர்

அக்குபஞ்சர் சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது.. சட்டப்படி அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்தாரா என்பது ஆய்வில் தெரிந்த பின்னரே அதற்கான நடவடிக்கை பாயும் தற்போது கர்ப்பிணி பெண் உடல் ஆய்விற்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad