அரூர் அருகே பட்டப்பகலில் வாகனம் மோதி காட்டுப்பன்றி பலி.
தர்மபுரி மாவட்டம் அரூர் - கொளகம்பட்டி போக்குவரத்து சாலை வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல வகை வன விலங்குகள், மயில் போன்ற பறவைகள் உள்ளது. இந்த சாலையோரங்களில் இரவு பகலாக வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சாலையைக் கடக்க முயன்ற 2 வயது மதிக்கத்தக்க காட்டு பன்றி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. அங்கிருந்த வனத்துறையினர் காட்டுப்பன்றி உடலை மீட்டு போஸ்ட்மார்டம் செய்து புதைத்தனர்.