பாமக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் நியமனம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலராக பி.வி.செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், போசிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேடியப்பன் மகன் பி.வி.செந்தில். இவர், தற்போது பாமக இளைஞர் சங்க மாநில செயலராக உள்ளார். இதையடுத்து, பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், இளைஞர் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது ஒப்புதலுடன், தருமபுரியின் (கிழக்கு) புதிய மாவட்ட செயலராக பி.வி.செந்திலை நியமனம் செய்து பாமக தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.