பழைய தர்மபுரியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம் மற்றும் கோவிட் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை தருமபுரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் இணைந்து இன்று (24.09.21) அளே தருமபுரி சமுதாயக் கூடத்தில் நடத்தியது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊட்டசத்து மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஊட்ட சத்தின் அவசியத்தை விளக்கும் வகையில் ஊட்டசத்து கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் சிறுதானிய வகைகள், பழங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளிட்டவைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள், வளர் இளம்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மகளிர் திட்டத்தின் உதவித்திட்ட அலுவலர் அங்குசாமி ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம் மற்றும் கோவிட் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்சியை தொடங்கிவைத்து பேசினார். அவர் பேசும்போது ‘ அரசின் ஊட்டசத்து திட்டங்களை பொதுமக்கள் அறிந்துக்கொண்டு தங்கள் குழ்தைகள் ஆரோக்கியமாக வளர பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது கோவிட் சூழலில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவதையும் வழக்கமாக கொள்ள வேண்டும்.” என்றார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் இந்த விழிப்புணர்வு கருத்தரங்களில் பங்கேற்று விழிப்புணர்வு கருத்துகளை எடுதுத்துரைத்தனர். முன்னதாக கள விளம்பர அலுவலர் பிபின் எஸ் நாத் வரவேற்றார். முடிவில் கள விளம்பர உதவியாளர் சு.வீரமணி நன்றி தெரிவித்தார்.
நிழகழ்ச்சியில் ஆரோக்கியமான குழந்தை போட்டி, சமையல் போட்டி, கோலப்போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.