Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

4 மாத கர்ப்பிணி பெண் மர்ம மரணம்: சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் சாலை மறியல்.

தர்மபுரி அருகே 4 மாத கர்ப்பிணி பெண் மர்ம மரணம்: சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் சாலை மறியல்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த வெங்காயனூர் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா(எ)வனிதா(24) பி.இ படித்தவர் ஆவார். வனிதாவிற்க்கும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே மலையப்பநகர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் என கூறப்படும் மாணிக்கவாசகம்(30) என்பவருக்கும், இரு தரப்பு பெற்றோர்களின் ஏற்பாட்டில் கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் இன்று காலை மலையப்பநகரிலுள்ள காணவரின் வீட்டு குளியல் அறையில், துப்பட்டாவில் தூக்கிட்ட நிலையில் 4 மாத கர்ப்பிணி பெண் வனிதா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த  தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார் இறந்து கிடந்த வனிதாவின் சடலத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்க்கிடையில் வனிதா இறப்பு குறித்து தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள், சடலத்தை கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ்-ஐ, சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறிஞ்சி நகர் சுங்க சாவடி முன் தடுத்து நிறுத்தி, கர்ப்பிணி பெண் வனிதா இறப்புக்கு காரணமானவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு, சிறைபிடித்த சடலமிருந்த ஆம்புலன்சை விடுவித்தனர். 

இந்த மறியல் போராட்டத்தால் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேலும் இதேபோல் கர்ப்பிணி பெண் பவித்ரா(எ)வனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கைது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாறுத்து, தர்மபுரி அரசு மருத்துவமனை முன்புள்ள பைபாஸ் சாலையின் இருபுறமும் வனிதாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீசார் மற்றும் தர்மபுரி தாசில்தார் ராஜராஜன் ஆகியோர் நேரில் வந்து மறியலிபேச்சு வார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உறுதி அளித்த பின்னர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திருமணமாகி சுமார் 6 மாதமே ஆன 4 மாத கார்ப்பிணி பெண் பவித்ரா(எ)வனிதா இறப்பு குறித்து தர்மபுரி சார் ஆட்சியர் சித்ராவிஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884