அரூர் ஒன்றியம், வடுகப்பட்டி கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் தேவைக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றை அரசு கட்டி அருகில் உள்ள ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து. அந்த நீர்த்தேக்க தொட்டிக்கு பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி வீதி வீதியாக பைப் லைன் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆழ்துளை கிணறு அடிக்கடி பழுதடையும் பொழுது கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வடுகப்பட்டி கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்பொழுது ஏற்கனவே போடப்பட்ட வீதி பைப் லைன்கள் அனைத்தும் அகற்றப்பட்டு நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ்ப் பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் ஒரே இடத்தில் 12 பைப்புகள் பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது வீணாக சாலையில் வெளியேறி வரும் குடிநீர், தற்பொழுது நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பைப் லைன் எங்காவது பழுதடைந்தால் இந்த கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதை சமாளி ஆழ்துளைக்கிணறு சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அந்த ஆள்துளை கிணறு இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை ஏற்கனவே இருந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்து என்ன ஆனது என்றே தெரியவில்லை, தற்பொழுது 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியும் பழுதடைந்து உள்ளது.
தற்பொழுது ஒகேனக்கல் குடிநீர் மட்டுமே கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது பழுதடைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை. தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒகேனக்கல் குடிநீரை நீர்த்தேக்க தொட்டிக்கு குறைந்த அளவு தண்ணீர் நிரப்பி கிராம மக்களுக்கு வழங்கி வருகின்றனர். பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ்ப் பகுதியில் தண்ணீர் பிடிக்க கிராம மக்கள் பயந்து வருகின்றனர். ஒரே இடத்தில் அனைவரும் குடிநீர் பிடிப்பதால் வீணாக சாலையில் குடிநீர் வெளியேறி வருகிறது. எனவே ஏற்கனவே அமைக்கப்பட்ட வீதி பைப்புகள் போன்று மீண்டும் அமைத்து,நீர்த்தேக்கத் தொட்டியை புதிதாக கட்டி, சாக்கடை கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.