மருதம் நெல்லி (ஜெயம்) கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நல்லானூர், தருமபுரி.
மாண்புமிகு தமிழக முதல்வர்.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கொரானா விழிப்புணர்வு நிகழ்வினை, தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, மருதம் நெல்லி (ஜெயம்) கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஏரியூர் காவல்துறை சார்பில் ஏரியூர் கிராமத்தில் இன்று (05.08.2021) வியாழக்கிழமை கிராமம்தோறும் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள், முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வினை கல்லூரி தாளாளர். Dr. K. கோவிந்த், கல்லூரி துணை முதல்வர்கள் Dr.C.காமராஜ், Dr.S.தமிழரசு, Dr.A.இம்தியாஸ், நிர்வாக அலுவலர் திரு.R.கணேஷ் மற்றும் ஏரியூர் துணை காவல் ஆய்வாளர் திரு.சேகர், திரு.முருகன் ,ம.பிரின்ஸ் துணை காவல் ஆய்வாளர்கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களும் முன்னிலை வகித்து நிகழ்வினை சிறப்பாக நடத்தினர்.
மேலும் இந்நிகழ்வினை தொடர்ந்து மருதம் நெல்லி (ஜெயம்) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட அளவிலான கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான இணைய வழி கொரானா விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடைபெற்றது. பங்குபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியவர் உதவிப்பேராசிரியர் திரு.நற்கவி.நா.நாகராஜ், தமிழ்த்துறை.