தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பாக கட்டணமில்லாத கல்வி ஆண்டாக தமிழக அரசு அறிவிக்க வேண்டி மனு அனுப்பவும் தர்மபுரி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மனு அனுப்பப்படுகிறது.
தருமபுரி மாவட்டம் தலைமை தபால் நிலையத்தில் மாநில தலைவர் ஜெயக்குமார் அவர்கள் கலந்துகொண்டு தமிழக முதல்வருக்கு மனு அனுப்புகிறார்.
1.ஆரம்பம் முதல் உயர்கல்வி வரை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.
2. மாணவர்களுக்கான கல்வி கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 3. ஜாதி மதம் பேதமின்றி அனைவருக்கும் கல்வி உதவித்தொகை சமமாக வழங்க வேண்டும்.
4.அரசு கல்லூரிகள் தொழில்கல்லூரிகளில் எந்த ஒரு இதர கட்டணங்களையும் பெறக்கூடாது.
5.அனைவருக்குமான கல்வி சமமான கல்வி தரமான கல்வி வழங்க அரசு உறுதி ஏற்க வேண்டும். என்று தமிழக முதலமைச்சருக்கு தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் இருந்து மனுக்கள் அனுப்பப்பட்டது.