தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் (2020-21) ன் கீழ் மீன்வளர்ப்பிளை விரிவுப்படுத்திட மானியம் வழங்கும் திட்டம்.
தருமபுரி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-21 ன் கீழ் மீன்குளம் அமைத்து மீன்வளர்ப்பு செய்திட மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இத்திட்டத்தின்படி ஒரு ஹெக்டேரில் மீன்வளர்ப்புகுளம் அமைத்திட ஆகும் செலவினத்தொகை ரூ.7.00 இலட்சத்தில் 50% மானியமாக ரூ.3.50 இலட்சம் மற்றும் ஒரு ஹெக்டேர் நீர்பரப்பில் மீன்வளர்ப்பு செய்திட ஆகும்.
உள்ளீட்டு செலவினத்திற்கான தொகையான ரூ.1.50 இலட்சத்தில் 40% மானியமாக ரூ.60,000/-ம் ஆக மொத்தம் ஒரு ஹெக்டேரில் மீன்பண்ணை அமைத்து மீன்வளர்ப்பு செய்திட ரூ.4.10 இலட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. எனவே, மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் 0.25 ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை உள்ள நிலப்பரப்பில் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மீன்வளர்ப்பு குளம் அமைக்க பயனாளி சொந்த நிலம் அல்லது 5 வருட குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும்.
மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் தருமபுரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, நிலத்தின் வரைபடம்) உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், மூப்புநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், 1/165 ஏ, இராமசாமிகவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, தருமபுரி - 636705 என்ற (அலுவலக தொலைபேசி எண்: 04342-296623) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.