தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாவட்ட சமூகத் தணிக்கை உயர்மட்டக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாவட்ட சமூகத் தணிக்கை உயர்மட்டக் குழுவால் 2016-2017, 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளில் சமூகத் தனிக்கை செய்யப்பட்ட தணிக்கைப் பத்திகளை நீக்கம் செய்ய காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, ஏரியூர் மற்றும் கடத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்
நிலுவையில் உள்ள 592 நிலுவைப் பத்திகளை முன்னிலைப்படுத்தி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
உயர்மட்டக்குழு கூட்டத்தில் சமூகத் தணிக்கை குழுவால் தடை எழுப்பப்பட்ட தணிக்கைப் பத்திகளின் மீது தனி கவனம் செலுத்தி ஆவணங்களை முன்னிலைப்படுத்தி தணிக்கைப் பத்திகளை நீக்கம் செய்ய, ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கிராம ஊராட்சிகள்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(தணிக்கை), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(MGNREGS), உதவி பொறியாளர்கள், ஒன்றிய பணிமேற்பார்வையாளர்கள் ஊராட்சி செயலர்கள் மற்றும் பணித்தளப் பொறுப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்படும்போது தணிக்கை விவரம் தெளிவாகவும் மற்றும் சுருக்கமாகவும் அறிக்கை வெளியிட சமூகத் தணிக்கை குழு மாவட்ட வள அலுவலர் மற்றும் வட்டார வள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
சமூகத் தணிக்கை உயர்மட்டக்குழு கூட்டத்தில் அனைத்து வகையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஆவணங்கள் கண்டிப்பாக முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்/ திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.வைத்திநாதன் இஆப., செயற்பொறியாளர்(ஊரக வளர்ச்சி) திரு.முத்துசாமி, உதவி திட்ட அலுவலர்(MGNREGS) திரு.மணிகண்டன், உதவி இயக்குநர்(தணிக்கை) திரு.முரளி கண்ணன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.