இந்த கிராமத்தில் பல மாணவ மாணவிகள் தனியார் பள்ளியிலும் அரசு பள்ளியிலும் பயின்று வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடிய நிலையில் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது.
எனவே வனப்பகுதி ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் செல்போன் ஆன்லைன் வகுப்பிற்கு நெட்வொர்க் இணைப்பு இல்லாததால் மாணவ மாணவிகள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் உயர் கோபுர மேல் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பயின்று வருகின்றனர்.
செல்போன் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக ஆன்லைன் வகுப்பில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் அவசர காலங்களில் வனப்பகுதி கிராமம் என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் பாதுகாப்பு வேண்டி தொடர்பு கொள்ள கூட நெட்வொர்க் சிக்னல் இல்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் தங்களது கிராமத்தில் செல்போன் டவர் அமைத்தால் பல பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.