கீரைப்பட்டி பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கை.
கீரைப்பட்டி சுற்றுவட்டார கிராம பகுதியில் செல்வ சமுத்திரம், இந்திராநகர், குடியிருப்பு பகுதிகளில் பள்ளிச்செல்லா மாணவ ,மாணவிகள், மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் போது குறுவள மையத்தின் பொறுப்பாளர் கோபால், கீரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்றுநர் குப்புசாமி மற்றும் சிறப்பு ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் பள்ளிச்செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் பொன்முடி மற்றும் துணை ஆய்வாளர் பொன்னுசாமி அவர்களின் மேலான ஆலோசனையின்பேரில் மாற்றுத்திறாளிக்குழந்தைகளை கீரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், உடனடியாகச் சேர்க்கப்பட்டனர். மேலும் அப்பகுதி பெண்களை அழைத்து கல்விக் கற்பதின் அவசியத்தையும், பெண்கள் பாதுகாப்பைக் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக