தருமபுரி மாவட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கு அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் 50 பயனாளிகளுக்கு கேட்டரிங் பயிற்சி அளிக்க ரூ.10.00 இலட்சம் நிதி ஒதுக்கிடு வரப்பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் அழிவின் விளிம்பில் உள்ள தகுதியான பழங்குடியின பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற பழங்குடியினர் சாதிச்சான்று, கல்விச்சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்றுடன் விளர்ணயப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் பெறப்படும் இடம்: மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடத்தில் தரைதளத்தில் இயங்கும், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்தில் 30.08.2021-க்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக