பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும் இங்கு வெளிநாடு வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் கடந்த நான்கு மாதங்களாக தடையை நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மாவட்ட நிர்வாகம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது சீரமைக்கும் பணியில் ஒகேனக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அருவிக்குச் செல்லும் சாலைகளின் ஓரம் இருந்த கடைகள் அகற்றப்பட்டு சாலை ஓரங்களில் அழகிய செடிகள் நடப்பட்டு இயற்கை புல்கள் வைக்கப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள குரங்குகள் செடிகளில் ஏரி கிளைகளை உடைத்து விடுகின்றன. மற்றும் ஆடு மாடுகள் செடிகளை சாப்பிடுவதும் உடைப்பதுமாக உள்ளன.
எனவே சீரமைக்கப்பட்டு அழகிய நிலையில் இருக்கும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பராமரித்து தற்பொழுது உள்ள அழகிய பொலிவுடன் வைத்துக் கொள்ளும்மா மாவட்ட நிர்வாகம் என்று தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.