இரு சக்கர வாகன விபத்தில் அடிப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி.
பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஸ்ரீகாந்த்(20).இவர் பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அதே போல அரங்கபுரத்திலிருந்து முனிராஜ்(55) இரு சக்கர வாகனத்தில் பென்னாகரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.பருவதனஅள்ளி அடுத்த மசூதி அருகே வரும் போது இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.அப்போது தர்மபுரியிலிருந்து பாமக மாநிலத் தலைவரும்,பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி காரில் பென்னாகரத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இந்த விபத்து நடந்தது.விபத்தை நடந்ததை அறிந்த எம்எல்ஏ உடனடியாக காரில் இருந்து இறங்கி காயம்பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.