Type Here to Get Search Results !

இரவில் திருடப்படும் கனிமவளங்கள்; மக்கள் போராட்டம்.


கடத்தூர் அடுத்த கோத்துரெட்டிபட்டி ஊராட்சியில் உள்ள வேப்பிலைப்பட்டி  கிராமத்தை ஒட்டிய ஏரி உள்ளது இந்த ஏரிக்கு நீர் வருவதற்காக ரயில்வே இருப்புப் பாதை வழியாக சிறு ஓடை அரசு அமைத்து இருக்கிறது இந்த ஓடையின் மையப்பகுதியில் ஏற்கனவே இரண்டு சிறிய தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 

இதனை அடுத்த கோத்துரெட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா இவருடைய கணவர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சம்பத் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் சுமார் அரை ஏக்கர் அளவிற்கு 20 அடி பள்ளத்தில் உள்ள அனைத்து மணல் மற்றும் கிராவல் மண்னை ஜேசிபி மற்றும் டிராக்டர் பயன்படுத்தி 600 லோடு மதிப்புடைய சுமார் 10 லட்சத்திற்கும் மேல் சட்டவிரோதமாக கனிம வளத்தையும் சுரண்டி கள்ள சந்தையில் விற்று வருகிறார் . இதை அறிந்த ஊர் பொதுமக்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தனர். 


ஏன் இப்படி முறைகேடான முறையில் கனிம வளத்தைக் கொள்ளை அடிக்கிறீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு சம்பத் யாராவது என்னை கேள்வி கேட்டால் உங்கள் அனைவரையும் அடித்து இதே இடத்தில் குழி தோண்டி புதைத்து விடுவேன் என்று பொதுமக்களைப் பார்த்து மிரட்டியுள்ளார். இதனால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் . மேலும் ஊராட்சி பகுதியிலிருக்கும் குளம் குட்டை ஏரி ஆகிய பகுதியில்  ஆகிய பகுதியில் இருக்கும் மண் வளத்தையும்  ஆகிய பகுதியில் இருக்கும் மண் வளத்தையும்  ஆகிய பகுதியில் இருக்கும் மண் வளத்தையும் சட்டவிரோதமாக ஆகிய பகுதியில் இருக்கும் மண் வளத்தையும் சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்து வருகிறார் என்றும் பொது மக்கள் கூட்டாக தெரிவித்தனர். 


மேலும் பொது மக்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தொலைபேசி வாயிலாக கேட்ட பொழுது அவர்கள் முறைப்படி தான் செய்கிறார்கள் என்று கூறிவிட்டதாக தெரிவித்தனர். ஆகவே மாவட்ட வருவாய்த் துறை மற்றும் கனிமவள துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த சட்ட விரோதமான மணல் மற்றும்  கிராவல் மண் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க தவறினால் ஊராட்சியில் குடியிருக்கும் அத்தனை பொதுமக்களை திரட்டி அருகில் இருக்கும் கடத்தூர் நகரில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் கிராம இளைஞர்கள் ஊராட்சி மன்ற தலைவருடைய கணவர் சம்பத் மற்றும் கவுன்சிலர் கோபுரம் கணவர் கோவிந்தசாமிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


*File Image.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies