செடிகளுக்கு நோய் தாக்குதல்; விவசாயிகள் கவலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜூலை, 2021

செடிகளுக்கு நோய் தாக்குதல்; விவசாயிகள் கவலை.


தருமபுரி மாவட்டம், அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு ஓரளவு மழை பொழிந்து வருவதால் மகிழ்ச்சியில் விவசாயிகள்  குறைந்த தண்ணீர் செலவில் விளைச்சல் தரும் மரவள்ளிகிழங்கை ஆர்வத்துடன் கூடுதலான விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ளனர். விவசாய கிணறு வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் இன்றி, மேட்டு விவசாய நிலம் வைத்திருக்கும் ஏராளமான  விவசாயிகளும் லாபம் தரும் பணப்பயிரான மரவள்ளி கிழங்கை சுமார் 20 ஆயிரத்திறகும் மேற்பட்ட விவசாய நிலங்களில்  சாகுபடி செய்துள்ளனர். இதுவரை அதிக பாதிப்பை ஏற்படுத்தாத  மரவள்ளிக் கிழங்கு இந்த ஆண்டு பெரும் அதிர்ச்சியை விவசாயிகள் ஏற்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மரவள்ளி கிழங்கு விவசாயம் ஜனவரி மாத தொடக்கத்தில் நடவை செய்யப்பட்டும், தொடர்ந்து பராமரிப்பு செய்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு  செடிகளின் இலைகள் வளர்ச்சியைப் பொறுத்தே  கிழங்குகள் உற்பத்தி அதிகரித்து  எடையும் கூடும். ஜூன், ஜூலை  மாதத்தில் மரவள்ளி கிழங்கு செடியின் அடி பாகத்தில் கிழங்கு ஊரும் தன்மையை அடையும். அக்டோபர் மாதம் முதல் அறுவடைக்குத் தயாராகும். இந்த நிலையில் இந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கு செடிகளின் இலைகளை வெள்ளை மாவு பூச்சி, செம்பேன்  போன்றவையால் நோய்த் தாக்கம்  அதிகரித்து  மரவள்ளிக்கிழங்கு இலைகளை தாக்கப்பட்டு அதன் நிறம் உருமாறி பழுப்பு நிறமாக காட்சியளித்து  இலைகள் உதிர்ந்து மரவள்ளி கிழங்கு வளர்ச்சி பெறும் தன்மையை இழந்து விட்டது. 


இதுகுறித்து மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கூறுகையில் கடந்த ஆண்டு மரவள்ளி கிழங்கு  நன்கு விளைச்சல்  கொடுத்தது மூட்டை தொடக்கத்தில் ரூ. 350 முதல் இறுதியாக ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. மரவள்ளிக்கிழங்கு விவசாய செடியை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த ஆண்டு மாவு பூச்சி, செம்பேன் தாக்குதலால் மரவள்ளிக்கிழங்கு உருவாகும்  பருவத்தில் செடியின் இலைகள் பாதிப்படைந்து அதன் நிறம் உருமாறி கருகி கிழங்கு உற்பத்தியாகும்  தன்மையை இழந்துவிடுகிறது.

நோய் தாக்குதலை தடுப்பதற்காக  வேளாண்மை மருந்து கடைகளில் நோய் தாக்குதல் குறித்து எடுத்துரைத்த அவர்கள் ஒரு மருந்தை கொடுத்து இதை பயன்படுத்துங்கள் சரியாகிவிடும் என்று வாக்குறுதி கொடுத்த பிறகு அந்த மருந்தை வாங்கிச் சென்று பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்குக் பயன்படுத்திய பிறகும்   எந்த பலனும் இல்லை.


இதுதொடர்பாக  ஒரு வேளாண் அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் வந்து பார்வையிட்டதே கிடையாது. இதுபோன்ற பூச்சித் தாக்குதலைத் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி எனப்படும் பூச்சி வகை வேளாண் ஆராய்ச்சி மையங்களில் உள்ளது. அந்த வகையான பூச்சிகளை  பாதிக்கபட்ட மரவள்ளிக்கிழங்கு விவசாய பயிர்கள் செலுத்தினாள் மரவள்ளிக்கிழங்கு இலைகளை தாக்கும் பூச்சிகளை அந்த ஒட்டுண்ணி பூச்சிகள் அழிக்கும் தன்மை கொண்டது. அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் எங்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறை  மூலம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை  ஆய்வு செய்து அதற்குத் தகுந்தாற்போல் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad