Type Here to Get Search Results !

பாரத் மாலா சாலை திட்டம்; வெட்டப்படும் பிரமாண்ட மரங்கள்.


பாரத் மாலா திட்டத்தில் தருமபுரி முதல் ஓசூர் வரை பாலக்கோடு, இராயக்கோட்டை வழியாக பெங்களூரு செல்லும் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  NH844 சாலை 71.11கிமீ தூரம் அமைக்கும் திட்டம் 2,061கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டள்ளது. 

தற்போது தருமபுரி தடகம்  மேம்பாலத்திலிருந்து சாலையில் ஓரத்தில் இருந்த பிரமாண்ட புளியமரங்கள் கனரக இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது, இது  சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது, எனினும் மக்களின் வசதிக்காக இந்த சாலை அகலப்படுத்துவதால் பொதுமக்கள் இந்த திட்டத்தை வரவேற்கின்றனர். இது குறித்து திட்ட மேலாளர் திரு. மதன் கூறும்போது, இந்த திட்டம் முடிக்க காலஅளவாக 1 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies