Type Here to Get Search Results !

தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்.


இன்றைய இளைஞர்களது வேலைபெறும் திறனை அதிகரிக்கும் விதமாக, பல்வேறு திறன் பயிற்சிகளின் தேவை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் கருதி இளைஞர்களிடையே திறன் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு படிப்பு, பணிவாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஜுலை 12 - 2021 முதல் ஜுலை 16- 2021 வரை ஒரு வார காலம் "தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக” அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது மாநிலத்தில் நிலவும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒவ்வொரு நாட்களுக்குமான, தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்தும் "Webinar” மூலமாகவே நடத்தப்பட உள்ளது.


முதல் நாளான ஜூலை 12-ம் தேதியன்று மாற்றத்திறனாளிகள் நல அலுவலருடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், இரண்டாம் நாளான ஜூலை 13-ம் தேதியன்று மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், மூன்றாம் நாளான 14.07.2021 அன்று சமூக நலத்துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்துடன் இணைந்து மூன்றாம் பாலினருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், நான்காம் நாளான 15.07.2021 அன்று திறன் மேட்பாட்டு கழக, மாவட்ட திறன் பயிற்சி அலுவலரைக் கொண்ட நிகழ்ச்சியும், 16.07.2021 அன்று தருமபுரி, அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் திறன் பயிற்சி பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டு அவ்விணையதளத்திலேயே திறன் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies