காதலன் தற்கொலை; காதலி தற்கொலை முயற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

காதலன் தற்கொலை; காதலி தற்கொலை முயற்சி.


ஓசூரில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காதலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஒசூர் ஜெய்சக்தி நகரை சேர்ந்தவர் பரத் (18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் பள்ளியில் படித்த மத்திகிரியை சேர்ந்த 18 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்.


இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பெண்ணின் பெற்றோர், அவரை பரத் உடன் பேசக் கூடாது என கண்டித்து உள்ளனர். காதலி பேசாததால் மனமுடைந்து காணப்பட்ட பரத், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவி, விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.


வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad