செல்போன் டவர் அமைத்து மாதம் 35000 பெறுங்கள்!. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

செல்போன் டவர் அமைத்து மாதம் 35000 பெறுங்கள்!.


தொழிநுட்பம் வளர்ந்துவரும்  வேளையில் மனிதனின் எண்ணமும் தேவைகளும் அதிகரித்து வருகிறது, குறிப்பாக 2019ல் உருவான கொரோனாவினால் பலர் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர், அவர்கள் தற்போது ஒரு பொருளாதார ரீதியிலான உதவி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நான் அந்த பெண்மணியின் நடத்திய உரையாடல் கீழே.

தொழில்நுட்பம் எப்படி வளர்ந்துவருகிறதோ அதனூடே அதை சார்ந்த குற்றங்களும், மோசடிகளும் பெருகிவருகிறது, அப்படிபட்ட ஒரு மோசடிதான் செல்போன் டவர் அமைத்து தருவதாக சொல்லும் மோசடி, இன்று காலை எனது தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது அதில் ஜியோ செல்போன் டவர் அமைக்க இடம் தேவை எனவும் இடத்திற்கு 25 இலட்சம் முன்பண்ணமும், மாதம் 35000 ரூபாய் வாடகையும் கொடுப்பதாகவும் வேலும் விவரங்களுக்கு என ஒரு தொலைபேசி என்னையும் குறிப்பிட்டிருந்தது.


நான் அந்த எண்ணிற்கு அழைத்தேன் மறுமுனையில் பதில் இல்லை, ஒரு மணி நேரம் களைத்து வேறு ஒரு என்னிலிருந்து அழைப்பு வந்தது அதில் பேசிய ஒரு பெண்மணி தங்கள் யுனிவர்சல் டவர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், ஜியோ டவர் அமைக்க 1.5சென்ட் இடம் தேவையெனவும் அதற்கு 25 இலட்சம் முன்பணமும், மாதம் 35000 வாடகையும் கொடுப்பதாகவும், அதற்கு ஆதார் அட்டை, நிலத்த்தில் பட்டா, சர்வே எண் போன்றவற்றை தான் குறிப்பிடும் எண்ணிற்கு வாட்சப் செய்யுமாறு கூறினார்.


சமீபத்தில் TRAI மற்றும் செல்போன் நிறுவனங்கள் தங்கள் இதுபோன்ற எந்த நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபடுவதில்லை என அறிவித்தன, இவர்கள் கூறிய நிறுவனத்திடம் பேசுகையில் தங்கள் இதுபோன்று யாரையும் நியமிக்கவில்லை என கூறினர், எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடியான நபர்களிடமிருந்து உஷாராக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad