மரங்களின் தாகம் தீர்க்க பாழடைந்த கிணறு மீட்டமைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

மரங்களின் தாகம் தீர்க்க பாழடைந்த கிணறு மீட்டமைப்பு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பாடி பூகானஅள்ளி ஏரிகளில் நடப்பட்ட 2000கும் மேற்பட்ட மரக்கன்றுகளின் தாகத்தை நிரந்தரமாக தீர்க்கும் வகையில், குப்பைத் தொட்டியாக பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த பழமையான பொதுகிணற்றை பீனிக்ஸ் குழுவினர் மற்றும் பாடி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இணைந்து தூர்வாரினர்.

40 அடியாக இருந்த கிணற்றை தற்போது 65 அடியாக ஆழப்படுத்தி… தற்போது கிணறு புதுப்பொலிவு பெற்று நாள் ஒன்றுக்கு சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் கிடைக்கிறது. இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் கிடைத்தது மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. மேலும் எதிர்வரும் காலங்களில் எதிர்கால தலைமுறையினருக்கு சுத்தமான ஆக்ஸிஜனும்,பல பறவைகளுக்கு உணவு மற்றும் இருப்பிடமும் கிடைத்துள்ளது.

இக் களப்பணியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கோவிந்தசாமி, மன்ற செயலர் சேட்டு,மன்ற உறுப்பினர்கள், பீனிக்ஸ் குழுவை சார்ந்த ஸ்ரீராமன்,திருமூர்த்தி,கணேஷ்,இராகேஷ்,ஜெய் கிருஷ்ணன், இளவரசன், தமிழ் பாரதி,தேவா ஆகியோர் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->