உதயநிதி ஸ்டாலின் மற்றும் DNV Dr. S. செந்தில்குமார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட Mybuddys செயலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

உதயநிதி ஸ்டாலின் மற்றும் DNV Dr. S. செந்தில்குமார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட Mybuddys செயலி.


Mybuddys (மைபுடீஸ்) என்ற தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளம் திரு.உதயநிதி ஸ்டாலின் MLA, அவர்களால் இவ்வுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக நமது தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை சார்ந்த இளைஞர்கள் நவீன் கோபாலகிருஷ்ணன் (25 வயது) மற்றும் பரத் (23 வயது) ஆகியோரின் NGB Info Tech international Pvt Ltd, என்ற கம்பெனி Mybuddys - Connect the World ! என்ற சமூக வலைத்தளத்தை திரு. உதயநிதி ஸ்டாலின் MLA, அவர்களின் முன்னிலையில் இவ்வுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. 


இத்தருனத்தில் திரு. Dr.செந்தில்குமார் MP (தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களும், ஆனந்தகுமார் (COO of Mybuddys ) அவர்களும் உடனிருந்தனர். 

Mybuddys என்பது இந்திய நாட்டில் Make in India மற்றும் Made in India என்பதின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட முதல் சமூக வலைத்தளம் ஆகும். 

இவர்கள் இச்சிறு வயதில் உலகத்தரம் வாய்ந்த சமூக வலைதள செயலியை  அறிமுகம் செய்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர்க்கு மாற்றாக Mybuddys செயலியினை உருவாக்கியுள்ளனர். 

Mybuddys செயலியில் என்னற்ற வசதிகளை புகுத்தி அனைத்து வயதினறும் பயன்படுத்தும் வகையில் அமைத்திருப்பது  இதன் தனி சிறப்பாகும், பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக Mybuddys செயலியில் Celebrities and Political party என அங்கீகரிக்கப்பட்ட குழுக்கள் உள்ளது. 

அனைவரும் தங்களது சுயவிவரம் (Profile) அங்கீகரிக்கும் வசதியினை கொடுத்து பொய்யாக சமூக வலைதள   கணக்குகளை உருவாக்குவதை Mybuddys செயலியில் தடுக்கப்படுகிறது.

உண்மையான செய்திகளை உருவாக்கியவரிடமிருந்து  உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் எண்ணற்ற வசதிகளை கொடுத்து நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் நவீன் மற்றும் பரத் அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கின்றனர். 

Website : www.mybuddys.in 

Playstore name : Mybuddys

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.