தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு.


அரூர் அடுத்த கைலாயபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கைலாயபுரம், சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயிர் கடன், நகை கடன்களை பெற்று விவசாய தொழிலுக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அடமானத்திற்கு வைக்கப்பட்ட நகைகளை, மீட்க கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றால், அங்கு வைக்கப்பட்ட நகைகள் ஏற்கனவே ஏலம் விடப்பட்டது என அதிர்ச்சியான தகவல்களை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் செயலாளர் தெரிவிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 


தங்களுக்கு எந்த ஒரு தகவலும் அளிக்காமல் நகைகளை ஏலம் விடப்பட்டது என கூட்டுறவு சங்க பணியாளர்கள் தங்களிடம் சொல்லும்போது அதிர்ச்சியை அளிக்கிறது எனவும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், அதேபோல் நாங்கள் வைக்கப்பட்ட நகைகளுக்கு அசலும் வட்டியும்  முழுமையாக கட்டியும் நகைகள் தங்களுக்கு கொடுப்பதில்லை என அடுக்கடுக்காக கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் செயலாளர் மீது விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


இதுமட்டுமின்றி பயிர்க் கடன் பெறுவதற்கு முன்கூட்டியே 5000 ரூபாய் கையூட்டு அளித்தால்தான் அதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுக்கு பயிர்கடன் வழங்குகின்றனர், ஒரு லட்சம் கடன் பெறுவதற்கு 70 முதல் 80 ஆயிரம் வரை மட்டுமே பெறமுடிகிறது, முழுமையாக கடன் தொகையை பெற முடிவதில்லை என வேதனையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 


இரண்டு நகைகள்  ஒரே நாளில் வைக்கப்படுகின்றது ஒரு நகைகள் மட்டும் கொடுக்கின்றார்கள். மற்ற நகைகள் ஏலம் விடப்பட்டதாக கூறுகிறார்கள் ஆனால் அந்த இரண்டு நகைகளுக்கும் அசலும், வட்டியும்  நாங்கள் கொடுத்திருக்கிறோம். ஏலம் விடப்பட்டதாக சொல்லப்படுகின்ற நகைகள் அனைத்தும் தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களிடம் கடுமையான முறையில் கேட்பவர்களுக்கு மட்டும் ஒரு சிலருக்கு நகை கொடுப்பதில்லை அவர்கள் கட்டிய பணத்தை மட்டும் கொடுக்கிறார்கள் மற்றவர்களுக்கு இவர்கள் ஏமாற்றத்தை மட்டுமே தருகிறார்கள். 


இது மட்டுமல்லாமல் பல்வேறு வகையில் மோசடிகள் இங்கு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரூர் காவல் நிலையத்தில் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பின்பு தர்மபுரி எஸ்பி அலுவலகத்திற்கும் மனுக்கள் கொடுத்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதனை புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->