Type Here to Get Search Results !

பெண்ணுக்கு பாலியல் கொடுமை; இருவர் கைது.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 34 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இரவு அந்தப் பெண் மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் காண்டீபன் (37) என்பவர் மது போதையில் சென்று அந்தப் பெண்ணின் வீட்டு கதவை தட்டி பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அங்கிருந்து சென்றுள்ளார். 

இதுகுறித்து காண்டீபன் தனது நண்பன் ஆண்டனிஷ்ரனிஸ்லாஸ் குரூஸ் (47) என்பவரிடம் தெரிவித்துள்ளார் பிறகு இந்த நபரும் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதனால் மனமுடைந்த அந்தப் பெண் காரிமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.துரைராஜ் அவர்கள் வழக்குப்பதிவு செய்து காண்டீபன் மற்றும் ஆன்டனிஷ்ரனிஸ்லாஸ் குரூஸ் ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies