தருமபுரி, ஆகஸ்ட் 12:
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, தருமபுரி நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமை வகித்தார்.
வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு, கழக அமைப்புச் செயலாளர் ராயபுரம் மனோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி நகரத்தைச் சேர்ந்த அனைத்து வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தருமபுரி நகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)