Type Here to Get Search Results !

தருமபுரியில் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் இலவச சட்டப் பயிற்சி; 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு.


தருமபுரி – செப்டம்பர் 07:


தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பில், பொதுமக்களுக்கான ஒரு நாள் இலவச சட்டப் பயிற்சி வகுப்பு தருமபுரியில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட செயலாளர் கே. எஸ். கோவிந்தசாமி தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது தொடர்பாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் குறைகளை உரிய முறையில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளில் இரு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து குரல் கொடுக்கப்படும் என அமைப்புகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த இலவச சட்டப் பயிற்சியில் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜ், மாநிலத் துணைச் செயலாளர் சீனிவாசன், டேவிட் குமார், தர்மேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


நிர்வாகிகள் செல்வம், பரசுராமன், விஜயகுமார், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சட்டம் மற்றும் தங்களது உரிமைகள் தொடர்பான தகவல்களைப் பெற்று பயனடைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies