Type Here to Get Search Results !

தருமபுரியில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைப்பு; மிழலைநாடு மக்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிர்வாகிகள்.


தருமபுரி – செப்டம்பர் 07:


தருமபுரியில் மிழலைநாடு மக்கள் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். தருமபுரி மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆர். கணேசன், பழங்குடியினர் அணியின் மாவட்ட துணைத் தலைவர் என். சௌந்தர்ராஜன் மற்றும் வழக்கறிஞர் என். தீனதயாளன் ஆகியோரின் ஏற்பாட்டில், மிழலைநாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எஸ். கோவிந்தன் மற்றும் எஸ். விக்னேஷ், எம். பூபதி, எம். வைரம் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகினர்.

இதையடுத்து, தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில், மாவட்ட தலைவர் சி. சரவணன் தலைமையில் அவர்கள் பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர். தேசப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் நோக்கில் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்த அவர்கள், தொடர்ந்து கட்சியின் உறுப்பினர் அட்டைகளையும் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies