Type Here to Get Search Results !

தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான அதிவேக சாலை உருளைச் சறுக்கு போட்டி!


தருமபுரி – செப்டம்பர் 09:


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பை (CM Trophy) போட்டிகளின் ஒரு பகுதியாக அதிவேக சாலை உருளைச் சறுக்கு போட்டி (Speed Skating Road Race) தருமபுரி மாவட்டம் SIPCOT தொழிற்பூங்கா சாலையில் இன்று (செப்டம்பர் 09) நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், மாவட்ட விளையாட்டு அலுவலரின் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது உருளைச் சறுக்கு திறமைகளை வெளிப்படுத்தினர்.


போட்டியை தருமபுரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் செயலாளர் மாஸ்டர் சீனிவாசன் மற்றும் குழு மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் சாமுவேல், சத்திய உதயமூர்த்தி, பானு, அன்பரசு, ஐஸ்வர்யா, அமுல்ராஜ் மற்றும் தியோ தன்னார்வலர் ஆகியோர் மாணவர்களை வழிநடத்தினர்.


போட்டியைக் காண பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தினர். அவர்களின் ஆதரவு போட்டிக்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது. மாணவர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், உருளைச் சறுக்கு விளையாட்டில் அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையிலும் நடைபெற்ற இப்போட்டி சிறப்பாக நிறைவு பெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies