Type Here to Get Search Results !

சுதந்திர தினம் வருது… தருமபுரியில் 2 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்! - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஆகஸ்ட் 12:
 


சுதந்திர தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட உள்ளன.


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL-2, FL-3, FL-3A/FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக் கூடம் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் 14.08.2026 இரவு 10 மணி முதல் 16.08.2026 நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டிருக்கும். இந்த காலகட்டத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் அல்லது கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்வோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies