Type Here to Get Search Results !

டிப்ளமோ படிக்க அரிய வாய்ப்பு! பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 31 கடைசி நாள்.


பாலக்கோடு, ஆகஸ்ட் 12:
 


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அனுமதியுடன், மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு 31.08.2026 வரை நடைபெறுகிறது.


நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 2 ஆண்டுகள் ITI படித்து தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.


முதலாம் ஆண்டு சேர்க்கை

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 11ஆம் வகுப்பில் இடைநின்றவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பில் சேர தகுதியுடையவர்கள். தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்விப் பயணத்தை தொடருமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 31.08.2026க்குள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies