தருமபுரி, ஆகஸ்ட் 12:
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் திரு. செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில் கண் மருத்துவம், பொது மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாணவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் உடல்நலம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும், தேவையான மருத்துவ வழிகாட்டுதல்கள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர். இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை கபில்தேவ், பிரபாகரன், நிவேதினி உள்ளிட்டோர் செய்திருந்தனர். முகாமில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 450 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்தனர்.
.gif)

.jpg)