Type Here to Get Search Results !

கத்தி மீது நின்று அருள்வாக்கு… பூசாரி மீது மிளகாய் கரைசல் ஊற்றி வினோத வழிபாடு! – நடுப்பனஅள்ளி கருப்பசாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா.


தருமபுரி, ஆகஸ்ட் 12:
 


தருமபுரி மாவட்டம், இன்டூர் அடுத்த நடுப்பனஅள்ளியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரிய கருப்பசாமி திருக்கோயிலில் 12-ஆம் ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக கருப்பசாமி கத்தி மீது நின்று அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பூசாரியின் மீது மிளகாய் கரைசல் நீர் ஊற்றும் வினோத வழிபாடு நடைபெற்றது.

இந்த சிறப்பு வழிபாடுகளில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பெரிய கருப்பசாமியை வழிபட்டனர். விழாவையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies