Type Here to Get Search Results !

வீட்டிலேயே தொழில் தொடங்கலாம்! தருமபுரியில் 30 நாள் இலவச House Wiring பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி, ஆகஸ்ட் 12:
 


தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (IND-RSETI), தருமபுரி சார்பில் 30 நாட்கள் இலவச House Wiring Training வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் வீட்டு மின் இணைப்பு மற்றும் வயரிங் தொடர்பான நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், மின்சாரப் பணியில் சுயதொழில் தொடங்குவதற்கான திறன்களும் கற்றுத்தரப்படுகின்றன.


யார் விண்ணப்பிக்கலாம்?

  • 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள்
  • குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • தருமபுரி மாவட்டத்தின் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை
  • பயிற்சி காலத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முழுமையாக கலந்து கொள்ள வேண்டும்.


பயிற்சியில் கற்றுத்தரப்படும் முக்கிய அம்சங்கள்

ஆதார் அட்டை, குடிநீர் அட்டை, மாற்று சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை மின் பணிகள் தொடர்பான பயிற்சிகளுடன், மாற்று சான்றிதழ், 100 நாள் வேலை அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் குறித்த வழிகாட்டுதலும் வழங்கப்பட உள்ளது. 


பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு வங்கி மற்றும் அரசு சார்ந்த சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி முடித்தவர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட உள்ளது.


பயிற்சி நடைபெறும் இடம்

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (IND-RSETI),
காதி பில்டிங், கலைக்கல்லூரி காம்பஸ், தருமபுரி – 636 705.


பயிற்சி மற்றும் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு:

📞 94422 74912 / 04342-30511


வீட்டு மின் வயரிங் துறையில் திறன் பெற்று வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் வாய்ப்பை உருவாக்க விரும்பும் தகுதியான இளைஞர்கள் இந்த இலவச பயிற்சி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies