Type Here to Get Search Results !

இராகி பயிரிட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!.


தருமபுரி, ஆகஸ்ட் 12:
 .


தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு நேரடி இராகி கொள்முதல் நிலையங்களில் இராகி கொள்முதல் செய்யும் பணி வரும் 20.08.2026 அன்று நிறைவுபெற உள்ளதால், விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள இராகியை உடனடியாக விற்பனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.


நடப்பு KMS 2025-2026 பருவத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தருமபுரி வட்டம் மதிகோண்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு மற்றும் பென்னாகரம் வட்டம் வண்ணாத்திப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிட வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் 24.11.2025 முதல் நேரடி இராகி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 


இந்த இரு கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 2,652 விவசாயிகளிடமிருந்து 3,180.450 மெட்ரிக் டன் இராகி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இராகி அறுவடை காலம் நிறைவடைந்து வரத்து குறைந்துள்ளதால், மதிகோண்பாளையம் மற்றும் வண்ணாத்திப்பட்டியில் செயல்பட்டு வரும் இரு நேரடி இராகி கொள்முதல் நிலையங்களிலும் 20.08.2026 அன்று கொள்முதல் பணி முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.


எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகள் தங்களிடம் அறுவடை செய்யப்பட்ட இராகி இருப்பில் இருந்தால், உரிய ஆவணங்களுடன் உடனடியாக அருகிலுள்ள இராகி கொள்முதல் நிலையத்தை அணுகி விற்பனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies